புதன், 25 ஆகஸ்ட், 2010

வெளிநாடு




கவிதை
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!
முழுதாய் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!
எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!
பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாலாய்ப்போன வெளி நாடு!!
பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!
வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!
கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!
துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு;
உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே! 

சனி, 21 ஆகஸ்ட், 2010

உங்கள் வயதை அறிய

அன்பர்களே உங்களுடைய வயதை மிக எளிய முறையில் அறிந்து கொள்ள இந்த பதிவை இடுகிறேன் .இதை திறந்து தேதியை அளித்தாலே போதும் மிக  எளிதாக உங்களுடைய வயது,மாதம் மற்றும் நாள் ஆகியவை தெரிந்துவிடும் ..நன்றி www.agecalculation.com

அறிமுகம் ...

வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.இது எனது முதல் பதிவில் காலடி எடுத்து வைக்கிறேன்.பயனுள்ள பல தகவல்களையும் மற்றும் AutoCAD , Coreldraw  சம்பந்தமான பல தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு முழு ஆதரவு தந்து உதவும்படி சக நண்பர்களை கேட்டுகொள்கிறேன் .